எதிர் கட்சி தலைவருக்கு வயிற்றுப்பசியில்லை அதிகாரப்பசி அமைசசர் ஆர்.பி தாக்கு

எதிர் கட்சி தலைவருக்கு வயிற்றுப்பசியில்லை அதிகாரப்பசி அமைசசர் ஆர்.பி தாக்கு
எதிர் கட்சி தலைவருக்கு வயிற்றுப்பசியில்லை அதிகாரப்பசி அமைசசர் ஆர்.பி தாக்கு

எதிர்கட்சி தலைவருக்கு வயிற்று பசி இல்லை, அதிகார பசி ஏற்பட்டுள்ளது - அதற்காக அவர் இடும் ஓலத்தை மக்கள் கேட்க விரும்பவில்லை; அமைச்சர் ஆர் பி உதயகுமார் பேச்சு*

மதுரை மாவட்டம் திருமங்கலம் அடுத்துள்ள டி.புதுபட்டி, ஆலம்பட்டி, குன்னத்தூர், எழுமலை கிராமத்தில் உள்ள 5,000 குடும்ப அட்டை தாரர்களுக்கு தலா 3 கிலோ கோதுமை மாவை நிவாரணமாக தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர் பி உதயகுமார் வழங்கி பொதுமக்களிடம் பேசும்போது;
கொரோனா தடுப்பு நடைவெடிக்கையில் 29 மாநிலங்களுக்கு வழிகாட்டியாக தமிழகம் திகழ்ந்து வருகிறது.10 ஆம் வகுப்பு பொதுதேர்வு ரத்து செய்யப்பட்டத்தில் இன்றைக்கு தமிழகத்தில் உள்ள மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் நம்பிக்கை நட்சத்திரமாக  தமிழக முதல்வர் உள்ளார்.அரசியல் செல்வாக்கு கேள்வி குறியாக உள்ள நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் தொலைக்காட்சி முன் அமர்ந்து உத்தரவை பிறப்பித்து தமிழக அரசின் மீது குற்றம் சொல்வதையே வேலையாக செய்து வருகிறார்.எதிர்கட்சி தலைவருக்கு வயிற்று பசி இல்லை, அதிகார பசி ஏற்பட்டுள்ளது. அதனை பெறவேண்டுமென்று அதற்காக அவர் இடும் ஓலத்தை மக்கள் கேட்க விரும்பவில்லை. மற்ற மாநில எதிர்கட்சியினரை போன்று தமிழகத்திலும் தமிழக அரசுடன் இணைந்து கொரோனா பேரிடர் காலங்களில் பணியாற்ற வேண்டும்.மக்கள் முகம் சுழிகின்ற வலையில் முகவரி தேடிவருகின்ற திமுக தலைவர், ஆக்கபூர்வமான பணிகளில் தன்னை ஈடுபடுத்தி கொண்டால் மக்கள் முகவரி அளிப்பார்கள் என்பதை அறிவுரையாக கூற விரும்புகிறேன் என்று கூறினார்.

தமிழ்ஒளி செய்தியாளர்

அருள்