உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு ஆட்டோ ஓட்டுநர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது

உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு ஆட்டோ ஓட்டுநர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது. 

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கிநகரில் கார்னிவல் கேட்டரிங் மற்றும் நர்ஸ்சிங் கல்லூரி நிர்வாகத்தினருடன் இணைந்து
அறந்தை ரோட்டரி கிளப் சார்பில் உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு அறந்தாங்கி நகர ஆட்டோ ஓட்டுநர்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கினார். 

அறந்தாங்கி நகர் பகுதியில் பேருந்துநிலையம், பேராவூரணிசாலை, அரசுமருத்துவமனை, கட்டுமாவடிமுக்கம்
சாலை,வாகைமரம், LNபுரம்,பள்ளிவாசல் என பல்வேறு பகுதிகளில் சுமார் 150-க்கும் மேற்பட்டவர்கள் ஆட்டோ ஓட்டி வருகின்றனர். 

கரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் ஆட்டோக்கள் இயங்காமல் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து கஷ்டப்பட்டு வரும் ஆட்டோ ஓட்டுனர்களை கௌரவிக்கும் விதமாக மே1 உழைப்பாளர் தினமான இன்று அரிசி காய்கறி உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை அறந்தை ரோட்டரி சங்கத்தின் சார்பில் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியினை ரோட்டரி சங்கதலைவர் தங்கதுரை தலைமையில் அறந்தாங்கி வட்டாச்சியர் சிவக்குமார், அறந்தாங்கிநகராட்சி ஆணையர் (பொறுப்பு) முத்துகணேஷ், நகர கூட்டுறவு வங்கி தலைவர் ஆதிமோகனக்குமார், ஐடியல் பள்ளி தாளாலர் கவிஞர் சேக்சுல்த்தான்
ஆகியோர் நிவாரண பொருட்களை வழங்கினர்.

நிகழ்வில் ரோட்டரி சங்க நிர்வாகிகள் சரவணன், சத்குரு, சிவசுப்பிரமணியன், செந்தில்வேலன்,
ஆத்மாமதிவாணன்., புவனாசெந்தில், முக்காராம்,தியாகு
விஐயசுந்தர்,சுப்பு,திபக் மற்றும் நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.