கள்ளர் சீரமைப்பு துறையை அரசு கையகப்படுத்தக்கூடாது கதிரவன் கோரிக்கை

கள்ளர் சீரமைப்பு துறையை அரசு கையகப்படுத்தக்கூடாது கதிரவன் கோரிக்கை
கள்ளர் சீரமைப்பு துறையை அரசு கையகப்படுத்தக்கூடாது கதிரவன் கோரிக்கை

ஜுன் 15

அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் தேசிய துறைத் தலைவரும் தமிழக தலைவரும் முன்னாள் உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர் பிவி கதிரவன் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் நேற்று (14.06.2022) பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் மாண்புமிகு ராஜகண்ணப்பன் அவர்களை சென்னை இல்லத்தில் சந்தித்து கடந்த மாதம்  கள்ளர் சீரமைப்பு விடுதிகளை பிற்பட்டோர் நலத்துறை நிர்வாகத்தின் கீழ் இணைக்கும் விதத்தில் அரசாணை எண் 40 நாள் (30.05.2022) யை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்ற கோரிக்கை அகில இந்திய ஃபார்வர்டு பிளாக் சார்பில் வலியுறுத்தினேன்.

அவ்வாறு கள்ளர் சீரமைப்பு விடுதிகளை பிற்பட்டோர் நலத்துறை நிர்வாகத்தின் கீழ் இணைப்பது 
ஒட்டுமொத்த கள்ளர் சீரமைப்பு துறையை புறக்கணிக்கும் விதமாக  அமைந்து விடும் என்று மாண்புமிகு அமைச்சரிடம் கோரிக்கையை வலியுறுத்தினேன்.

கருத்துக்களை கேட்ட மாண்புமிகு பிற்படுத்தப்பட்ட நலத்துறை அமைச்சர் அவர்கள் நமது உணர்வுகளுக்கு மதிப்பளித்து விரைவாக அரசாணை எண் 40 நாள் (30.05.2022)யை ரத்து செய்வதாக உறுதியளித்தார்.

மற்றும் கள்ளர் பள்ளிகள் குறித்தும் கள்ளர் பள்ளியில் பணி புரிகின்ற ஆசிரியர்கள் நலன் குறித்தும் பல்வேறு கோரிக்கைகளை அமைச்சர் அவர்களிடம் முன்வைத்தேன் விரைவில் அவர்களின் கோரிக்கைகளை பரிசீலிப்பதாக அறிவுறுத்தினார்.

பின்னர் தலைமைச் செயலகத்தில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அரசு முதன்மைச் செயலாளர் கார்த்திகேயன் அவர்களை  சந்தித்து அரசாணை எண் 40 நாள் (30.05.2022) ரத்து செய்ய வேண்டும் என்று நமது கோரிக்கைகளை முன்வைத்தேன்.

இந்நிகழ்வில் என்னுடன் கள்ளர் சீரமைப்பு அனைத்து ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு குழுவை சார்ந்த நிர்வாகிகளும் பொறுப்பாளர்களும் என்னுடன் பங்கேற்றனர்.


 பிவி கதிரவன்exmla உசிலம்பட்டி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தேசிய துணைத் தலைவர் தமிழ் மாநில பொதுச் செயலாளர் அகில இந்திய பார்வர்ட் கிளாக் தமிழ் மாநில குழு.