தென்னக ரயில்வே வட இந்தியர்களுக்கே சாதகம் மதுரை எம்பி சு.வெங்கடேசன் வேதனை

தென்னக ரயில்வே வட இந்தியர்களுக்கே சாதகம் மதுரை எம்பி சு.வெங்கடேசன் வேதனை
தென்னக ரயில்வே வட இந்தியர்களுக்கே சாதகம் மதுரை எம்பி சு.வெங்கடேசன் வேதனை

*தெற்கு ரயில்வே வட இந்தியர்களுக்கே முக்கியத்துவம் அளிக்கிறது - சரக்கு  காப்பாளர்  தேர்வு முடிவு குறித்து மதுரை எம்பி சு.வெங்கடேசன் அறிக்கை* 
தேர்வு எழுதிய விடைத்தாளை பொது வெளியில் காண்பிக்க வேண்டும் - வெங்கடேசன் எம்பி கோரிக்கை

தெற்கு ரயில்வே சரக்கு காப்பாளர்  தேர்வு முடிவு இன்று வெளியானது  இந்த தேர்வு முடிவு குறித்து  மதுரை பாராளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில்
தெற்கு ரயில்வேயின் சரக்கு வண்டி காப்பாளருக்கான தேர்வு என்பது கடந்த ஆண்டு இறுதியில் நடந்தது இது துறைவாரியான தேர்வு ஏற்கனவே ரயில்வேயில் பணியாற்றிக் கொண்டிருக்கின்ற பட்டதாரிகள் மட்டுமே இந்த தேர்வு எழுத தகுதி படைத்தவர்கள் அந்த அடிப்படையில் அந்த தேர்வில் சுமார் 5,000 ஊழியர்கள் தேர்வு எழுதியதில் 96 பேர் தேர்ச்சி பெற்றதாக தெற்கு ரயில்வே அறிவித்திருக்கிறது. 5000 பேரில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் வெறும் 5 பேர் மட்டுமே தேர்வு ஆகி இருப்பதாக தெரிகிறது இது பெரும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.மற்ற 90 சதவீதம்பேர் வட இந்தியாவைச் சேர்ந்தவர்கள் தேர்வாகிஇருக்கிறார்கள் இது எப்படி சாத்தியம் தேர்வு எழுதியவர்கள் ஏறக்குறைய 3000 பேருக்கு மேல் தமிழகத்தைச் சேர்ந்த தமிழர்கள் அவர்களில் 5 பேர் மட்டுமே தேர்வாகியிருப்பதாக அறிவிக்கப்பட்டிருப்பது சந்தேகத்தை ஏற்படுத்தியது.ஏற்கனவே தெற்கு ரயில்வே வட இந்தியர்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து தமிழர்களை புறக்கணிக்கிற செயலை பலமுறை செய்திருக்கிறது பலமுறை இந்த விஷயங்களை விவாதித்திருக்கிறோம் இந்த தேர்வு முடிவுகள் அந்த சந்தேகத்தை உறுதிபடுத்தியிருக்கிறது என்பதை இந்த நேரத்திலே பதிவு செய்கிறேன்.   ஏற்கனவே ஆர்ஆர்சி தேர்வில் செய்ததை போல்  தேர்வு முடிவுக்கான விடைத்தாளும்  தேர்வு எழுதியவர்கள் விடைத்தாளும் பொதுவெளியில் வெளியிட வேண்டும் அல்லது சம்பந்தப்பட்ட நபர்களாவது பார்ப்பதைப்போல நடவடிக்கை எடுக்க வேண்டும்  என அறிக்கை வெளியிட்டுள்ளார்