உசிலம்பட்டி கல்லூரியில் மகளிர் தின விழா நகராட்சி தலைவர் பரிசு வழங்கினார்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கல்லூரியில் உலக மகளிர் தின விழா ஏற்பாடு செய்யப்பட்டது கள்ளர் கல்விக் கழக செயலாளர் மற்றும் தாளாளர் வாலாந்தூர் பாண்டியன் தலைமையில்  நடைபெற்ற விழாவிற்கு கல்லூரியின் முதல்வர் டாக்டர் ஒரவி முன்னிலை வகித்தார்சிறப்பு விருந்தினர்களாக உசிலம்பட்டி நகராட்சி தலைவர் திருமதி சகுந்தலா, முனைவர் மஞ்சுகணேஷ் கலந்து கொண்டனர்

கல்லூரியின் சார்பில் பொன்னாடை போர்த்தி கவுரவித்தனர்

போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி மாணவிகளிடையே  பேசிய நகராட்சி தலைவர் சகுந்தலா அவர்கள் மாணவிகள் படிக்கின்ற இந்த காலகட்டத்தில் காதல் வயப்படாமல் பெற்றோர்களுக்கு நல்ல பெயரை வாங்கித்தர வேண்டும் என்றும்

மாணவிகள் செல்போனை பயன்படுத்துவது என்பது இருமுனைகளிலும் கூர்மையுள்ள கத்தியைப்போன்றது எனவே செல்போனை மிகவும் கவனமாக கையாள வேண்டும் என்றும், தன்னம்பிக்கையோடு இருந்தால் எதையும் சாதிக்க முடியும் பெண்களுக்கு வேண்டிய மூன்றாவது கை நம்பிக்கை என்றும் தெரிவித்தார் விழாவிற்கான ஏற்பாடுகளை முனைவர் பொன்ராம் செய்திருந்தார். விழாவில் கல்லூரியின் மாணவர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்