உசிலம்பட்டி பகுதியில் மீண்டும் சீனவைரஸ் அச்சத்தில் மக்கள்! தேவை விழிப்புணர்வு?

உசிலம்பட்டி பகுதியில் மீண்டும் சீனவைரஸ்  அச்சத்தில் மக்கள்! தேவை விழிப்புணர்வு?
உசிலம்பட்டி பகுதியில் மீண்டும் சீனவைரஸ்  அச்சத்தில் மக்கள்! தேவை விழிப்புணர்வு?

ஜூன் 19 உசிலம்பட்டி
 உலக மக்களை எல்லாம் அச்சுறுத்திக் கொண்டிருக்கும் சீன வைரஸ் அங்கு இங்கு  என எண்ணாத படி நகரம் முதல் கிராமம் வரை  வேகமாக பரவி உயிர் பலி வாங்கிக் கொண்டிருக்கிறது 
 இதுவரை நகர் பகுதிகளிலேயே மக்கள் நெருக்கம் அதிகம் உள்ளதால் அங்கு மட்டுமே இந்த நோய் பரவி வரும் என்கின்ற ஒரு நிலையில் மக்கள் இருந்து வந்தனர் இந்த நிலையில்
 மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகில் உள்ளது ஜோதிமாணிக்கம் இந்த ஊரைச் சேர்ந்த தமிழ்நாடு காவல்துறையில் பணிபுரியும் காவலர் ஒருவருக்கு  இந்த நோய் பரவியுள்ளதாகவும் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியானது இதனால் அருகில் உள்ள கிராம மக்கள் அச்சத்தில் உள்ளனர் அவரது வீடு தோட்டத்தில் தனியாக உள்ளது இதனால் இந்நோய் மற்றவர்களுக்கு பரவும்  வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது,  கறிக்கடை முதல் நகைக்கடை வரை கல்யாணம் .காதுகுத்து பிறப்பு முதல் இறப்பு வரை எல்லா இடத்திலும் கூட்டமாக இருந்து வருவது வழக்கம் இனி இந்த நிலையை கொஞ்சம் கொஞ்சமாக மாற்றிக்  கொள்ள வேண்டும் ஏழை பணக்காரன் ,சிறியவர், பெரியவர் என்ற பாகுபாடு இல்லாமல் இந்த நோய் பரவி வருகிறது எனவே பொது மக்கள் அரசு மற்றும் மருத்துவர்கள் கூறும் வழிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் கை கழுவுதல் முக கவசம் அணிந்து விழிப்புணர்வுடன் கூடிய சமூக இடைவெளியை பின்பற்றினால் மட்டுமே இந்த நோயிலிருந்து தப்பித்துக் கொள்ள முடியும் என்பதே உண்மை.
எதையும் செய்துவிட முடியும் ஆனால் அதற்கு உயிர் வாழ வேண்டும் விழிப்புடன் இருப்போம் விலகியிருப்போம்